இளம்பெண் பாலியல் வன்கொடுமை; த.வெ.க நிர்வாகிகள் இருவர் கைது !!!
இளம்பெண்ணை ஏமாற்றி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் த.வெ.க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இவருடைய நண்பர் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயபால். இவரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் நிர்வாகியாக உள்ளார்.
இவர்கள் இருவரும் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவரிடம் பணம் கேட்டு பெற்று உள்ளனர். நீண்ட நாட்களாகியும் இந்த பணத்தை திருப்பி தராமல் இவர்கள் இருவரும் இழுத்தடிப்பு செய்து வந்ததாகக் கூறப்படுகின்றது.
இருப்பினும் விடாப்பிடியாக பணத்தைத் திருப்பி தரும்படி அந்த பெண் கேட்டு வந்து உள்ளார். இதை அடுத்து, பணத்திற்கு பதிலாக வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைக் கூறி, அந்த பெண்ணை பாலமுருகனும், ஜெயபாலும் ராமநாதபுரம் அருகே உள்ள ஏர்வாடி பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு காரில் அழைத்துச் சென்று உள்ளனர்.
அங்கு வைத்து அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட அப்பெண் கொடுத்த புகாரின் பேரில், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த புகாரின் அடிப்படையில் பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவரும் தற்போது போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
https://x.com/i/status/2061695752313934243
அண்ணாமலை விமர்சனம்
இதன் இடையே, இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஓர் பதிவை பகிர்ந்து உள்ளார். அதில், 'த.வெ.க நிர்வாகிகள் பாலமுருகன் மற்றும் ஜெயபால் இருவரும், இளம்பெண்ணை வேலை வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகி உள்ள செய்தி மிகுந்த அதிரச்சி அளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பு குறித்து தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய த.வெ.க தலைவர் விஜய், தனது கட்சியினரே குற்றச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார் ? மாற்று அரசியல் என்று கூறி ஆட்சிக்கு வந்த த.வெ.க, இன்று த.வெ.க-வின் பாதையிலேயே பயணிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
குற்றமிழைத்த இருவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும், இது போல பெண்கள் பாதுகாப்பு கவலைக்கு உள்ளாகும் படியான சம்பவங்கள் நடைபெறாதவாறு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், த.வெ.க அரசை வலியுறுத்துகிறேன்' என்று அண்ணாமலை பதிவிட்டு உள்ளார்.

0 கருத்துகள்: