வியாழன், 16 ஜூலை, 2026

கோவையில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது..

SHARE

கோவையில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது...

கோவை மாவட்டம் ஆழியார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாய்க்கால் மேடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில், சுமார் 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், உத்தரவின்படி, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் நோக்கில் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, ஆழியார் காவல் நிலைய போலீசார் நடத்திய சோதனையில், உடுமலை பகுதியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் (30) மற்றும் ஹரிஹர குகன் (26) ஆகியோர் கஞ்சாவை விற்பனைக்காக வைத்து இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து சுமார் 1.1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.

போதைப்பொருள் விற்பனை மற்றும் சட்ட ஒழுங்குக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் எச்சரித்து உள்ளார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: