கோவையில் 1.100 கிலோ கிராம் கஞ்சாவுடன் வாலிபர்கள் கைது : காவல்துறை நடவடிக்கை !!!
கோவை, தடாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாகக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சின்னத்தடாகம் மற்றும் சோமையனூரைச் சேர்ந்த இரண்டு வாலிபர்களை, 1 கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிரப் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தடாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீஸார் சோதன மற்றும் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டனர்.
அப்போது தடாகம் போலீஸார் நடத்திய தீவிரக் கண்காணிப்பில், சந்தேகத்திற்கு இடமான முறையில் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற இரண்டு வாலிபர்களைப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில், விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதனைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் நடத்தி விசாரணையில் சின்னத்தடாகம் பகுதியைச் சேர்ந்த நித்யானந்தம் (26), சோமையனூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநாத் என்பதும், அவர்கள் வைத்து இருந்த
கஞ்சாவைப் பறிமுதல் செய்த தடாகம் போலீஸார், இருவரையும் கைது செய்து அவர்கள் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இரண்டு வாலிபர்களும் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

0 கருத்துகள்: