ஞாயிறு, 5 ஜூலை, 2026

கோவையில் கஞ்சா வேட்டை ; மருதமலை அடிவாரம் ஐ.ஓ.பி காலனி அருகே டூ-வீலரில் 4 கிலோ கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது – சிறையில் அடைப்பு !!!

SHARE

 கோவையில் கஞ்சா வேட்டை ; மருதமலை அடிவாரம் ஐ.ஓ.பி காலனி அருகே டூ-வீலரில் 4 கிலோ கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது – சிறையில் அடைப்பு !!!

 கோவை, மருதமலை அடிவாரம் அருகே இருசக்கர வாகனத்தில் 4 கிலோவிற்கும் அதிகமான கஞ்சாவை மறைத்து வைத்துக் கடத்திய கிருஷ்ணகிரியைச் சேர்ந்த வாலிபர் உட்பட இரண்டு பேரைக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாநகரில் போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிக்கும் பொருட்டு, மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வடவள்ளிக்கு உட்பட்ட மருதமலை அடிவாரம், ஐ.ஓ.பி காலனி பகுதியில் சட்ட விரோதமாகப் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது.

​இதை அடுத்து, கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

​அப்போது அந்த வழியாகச் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

 அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், அவர்கள் வைத்து இருந்த பையைத் திறந்து சோதனையிட்ட போது, அதில் விற்பனைக்காகச் கடத்தி வரப்பட்ட 4 கிலோ 100 கிராம் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

​இதை அடுத்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் 4.100 கிலோ கஞ்சாவைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த​கோகுல்நாத் தற்போது கோவை கவுண்டம்பாளையம், சேரன் நகர் மணல் தோட்டம் பகுதியில் தங்கி உள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்த் (24) இவர், தற்போது பீளமேடு செங்காளியப்பன் நகர் பகுதியில் தங்கி உள்ளார்.

​கைது செய்யப்பட்ட இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்த மதுவிலக்கு போலீஸார், அவர்கள் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இரண்டு வாலிபர்களும் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: