செம்மொழி பூங்கா பணியில் ரூபாய் 40 கோடி முறைகேடு - ஒப்பந்ததாரர் சங்கம் புகார் !!!
கோவை, செம்மொழி பூங்கா திட்டப் பணியில் ரூபாய் 40 கோடி முறையீடு நடைபெற்று இருப்பதாக ஒப்பந்ததாரர் சங்கம் புகார் செய்து உள்ளது.
தென்மண்டல ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் அமைச்சர் சம்பத் குமார் மற்றும் நகராட்சி நிர்வாகம் பொதுப் பணித் துறை நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ள புகார் மனுவில் கூறியிருப்பது ;
கோவை, காந்திபுரத்தில் கடந்த தி.மு.க ஆட்சியில் செம்மொழிப் பூங்கா திட்டப் பணிகள் நடந்தது. சுமார் ரூபாய் 45 கோடி திட்டப் பணி மதிப்பீடு செய்து டெண்டர் விடப்பட்டது. ஆனால் அதன் பிறகு கூடுதல் மதிப்பீடு என்ற பெயரில் சுமார் 40 கோடிக்கு மேல் மாநகராட்சி நிதியில் கூடுதல் தொகை ஒதுக்கி பணிகள் நடந்தது. இது ஒரு நூதன கொள்ளையாகும், இந்த மதிப்பீடுகளில் ஒன்றுக்கு இரண்டு மடங்காக விலைப் பட்டியலில் இல்லாத பல பொருள்களை பயன்படுத்தி போலியான விலை பட்டியல் தயார் செய்து சுமார் ரூபாய் 80 கோடி செலவு செய்து மாநகராட்சி பணம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது.
இதனை பொதுப் பணித் துறை வல்லுனர்கள், தனியார் வல்லுநர்கள் மற்றும் தணிக்கை அதிகாரிகளை வைத்து ஆய்வு செய்தால், சுமார் 40 கோடிக்கு மேல் போலி பில் போட்டு முறைகேடு செய்தது வெளிச்சத்திற்கு வரும்.
இது போன்ற ஒரு சாலை அமைத்தால், ஐந்தாண்டுகள் நீடித்து நிலைக்க வேண்டும், தேர்தல் செலவுக்கு பணம் தேவை என்பதால் ஐந்தாண்டு காலத்திற்குள் போடப்பட்ட சாலைகளை பெரும்பாலும் தேர்வு செய்து உள்ளனர். அதனை திரும்ப அமைப்பது போல் பாசாங்கு செய்து குறைந்த கனத்தில் போட்டு 50 சதவீதம் மட்டுமே பணிகள் செய்து 100 சதவீதத்திற்கு பில் போட்டு உள்ளனர்.
எனவே கடந்த ஆறு மாதங்களில் நடைபெற்ற அனைத்து பணிகளையும் மறு ஆய்வு செய்து, அதன் தரம் மற்றும் அளவை சரிபார்த்து தவறு இருக்கும் பணிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், செம்மொழி பூங்காவிற்கு முதலில் தயாரிக்கப்பட்ட மதிப்பீடு எவ்வளவு ? அதன் பின்னர் தற்பொழுது வரையிலான செலவினம் எவ்வளவு ? என பார்த்து அதன் முழு உண்மை தன்மையை ஆய்வு செய்ய வேண்டும், இதில் மதிப்பீடு தயாரித்தவர் பணியை பார்த்து போலி பில் தயாரித்து அதிகாரிகள் ஒப்பந்ததாரர்கள் மீது மற்றும் தேர்தல் நேரத்தில் 50 சதவீதம் மட்டுமே பணி செய்து போலி பில் பெற்றவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.

0 கருத்துகள்: