புதன், 15 ஜூலை, 2026

கோயில் நிலம் முறைகேடாக பத்திரப் பதிவு - சார்பதிவாளர் சஸ்பெண்ட் !!!

SHARE

 கோயில் நிலம் முறைகேடாக பத்திரப் பதிவு - சார்பதிவாளர் சஸ்பெண்ட் !!!

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்த விவகாரத்தில், பழனி மாவட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் அமைந்து உள்ள, தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 1 ஏக்கர் 40 சென்ட் நிலத்தை, நீதிமன்ற உத்தரவுகளை மீறி தனிநபர்களுக்கு முறைகேடாக கிரயம் செய்து கொடுத்ததாக புகார் எழுந்தது.

இது குறித்துக் கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் அளித்த புகாரின் அடிப்படையில், பழனி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், டிரஸ்ட் பிரமுகர் முருகதாஸ், நிலத்தை கிரயம் பெற்ற வெள்ளத்துரை மற்றும் சேதுபதி ஆகிய 4 பேர் மீது பழனி போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

​இதன் தொடர்ச்சியாக, இன்று (ஜூலை 13) பழனி காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, பழனி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாகசென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், அரசு நிலத்தை முறைகேடாக பதிவு செய்த விவகாரத்தில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை தற்காலிக பணி நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து பதிவுத்துறை டி.ஐ.ஜி உத்தரவிட்டு உள்ளார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: