ஞாயிறு, 5 ஜூலை, 2026

எதிரணியின் அசுரத் தாக்குதல்களில் இருந்து முதல்வர் விஜய்க்கு நான் தான் அசைக்க முடியாத கவசமாக இருப்பேன்” ; மேகதாது விபரீதத்தைத் தூண்டிவிடுவது மோடி அரசு தான் - கோவையில் தி.மு.க-வை விமர்சித்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அதிரடிப் பேட்டி!

SHARE

எதிரணியின் அசுரத் தாக்குதல்களில் இருந்து முதல்வர் விஜய்க்கு நான் தான் அசைக்க முடியாத கவசமாக இருப்பேன்” ; மேகதாது விபரீதத்தைத் தூண்டிவிடுவது மோடி அரசு தான் - கோவையில் தி.மு.க-வை விமர்சித்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அதிரடிப் பேட்டி!

“லஞ்சம் அடியோடு ஒழிப்பு; இதுவே த.வெ.க அரசின் சாதனை”: த.வெ.க ஆட்சிக்கு எதிராகப் பாயும் 356 உள்கட்டமைப்புச் சதி - “4 சீட் என்று முகத்தில் அடித்தவர்களுக்கு” கோவை விமான நிலையத்தில் வைகோ கொடுத்த பதிலடி !!!


மேகதாது அணையை கட்ட சொல்லி தூண்டிவிடுவது மத்திய அரசு தான் என்றும், எதிரணி தாக்குதல்களில் இருந்து முதல்வர் விஜய்க்கு கவசமாக இருப்பேன் என்றும், கோவையில் வைகோ பேட்டி அளித்து உள்ளார்.

கோவை விமான நிலையத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

குறிப்பிட்ட ஒரு பத்திரிகை என்னை புண்படுத்தும் விதமாக கேள்வி கேட்போது பொறுமையாக பதில் சொன்னேன். திரும்பத் திரும்ப கேள்வி கேட்கிறார்கள். பத்திரிகையாளர்களுக்கு உள்ள சுதந்திரம் எனக்கும் உள்ளது.

எனக்கு பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. நான் வருத்தம் தெரிவித்தேன். மூன்று தினங்களுக்கு முன்பு கருவேல மரங்களை அகற்றச் சென்ற போது, மீண்டும் அதே பத்திரிகை நிருபர் புண்படுத்தும் விதமாக கேள்வி கேட்டார்.

அதே பத்திரிகை சார்பில் யாராக இருந்தாலும் பொறுமை காக்க மாட்டார்கள். என்னை இப்படி இழிவுபடுத்துகிறார்கள்.

அசம்பாவிதம் நடக்கக் கூடாது என்று பயந்தேன். த.வெ.க அரசு அமைக்க போதுமான எண்ணிக்கை வந்த பிறகும் ஆட்சி அமைக்க வழிவிடாமல் கேலி செய்கிறார்கள். அதிலேயே ஓரவஞ்சனை தெரிந்தது. 356 மாநில அரசை டிஸ்மிஸ் செய்யும் பிரிவை அகற்ற வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கிறது. அது கவிழ்ந்து விடும், ஆறு மாதம் கூட நீடிக்காது என்கிறார்கள். கவிழ்த்து விட்டு ஆளுநர் ஆட்சியை கொண்டு வர வேண்டுமா?

இந்துத்துவா ?  பா.ஜ.க வை தமிழகத்திற்குள் நுழைய விடக் கூடாது என்பதைத் தான் ஸ்டாலினிடம் நான் சொன்னேன். அதே நேரத்தில் 356-ஐ பயன்படுத்தலாம் என்று சொல்கிறார்கள். கம்பத்தில் தேர்வு செய்யப்பட்ட ம.தி.மு.க உறுப்பினரை ராஜினாமா செய்ய வைத்தது தி.மு.க. இது என்ன பெருந்தன்மையா?

என்ன தகுதி இருக்கிறது? நீங்கள் தான் முன்பு வழிகாட்டி இருக்கிறீர்கள். இந்த ஆட்சி என்ன செய்கிறது என்று திமுக கேட்கிறது. நல்ல காரியம் செய்து இருக்கிறது.

ஜனநாயகத்தை நாசப்படுத்தும் விதத்தில் ஊழல், எதற்கெடுத்தாலும் கமிஷன் என்ற நிலை இப்போது இல்லை. கமிஷன் என்று பேசுவதற்கே இடமில்லை. லஞ்சம் நீக்கப்பட்டுள்ளது. இதுவே த.வெ.க அரசின் இமாலய சாதனை. ஆட்சியை இழந்துவிட்டு நிம்மதியாக இருக்க முடியவில்லையா?

த.வெ.க வை ஆதரிப்பதால் என் மீது கோபம் கொண்டு பாய்கிறார்கள். மதிப்புடன் நடத்துங்கள் என்றோம். ஆனால், "4 சீட்" என்று முகத்தில் அடித்தது போல் சொன்னார்கள்.

அவமதித்தாலும் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தேன். கூட்டணி தர்மத்திற்கு கட்டுப்பட்டேன். ஆட்சி இல்லாமல் இருக்க முடியவில்லையா? வேறு ஏதோ காரணம்.

உதயநிதி சோபா குறித்து பேசியதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. மேகதாது அணையைக் கட்டச் சொல்லி தூண்டிவிடுவது மத்திய அரசுதான். மோடி அரசு தான் காரணம். தமிழகம் கொந்தளித்து எழ வேண்டும். இது தமிழ்நாட்டிற்கே வரும் ஆபத்து. 25 மாவட்டங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படும்.

தொண்டர்கள் தி.மு.க வுடன் ஒட்டக் கூடாது, உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்கிறார்கள். எதிரணியில் இருந்து வரும் தாக்குதல்களில் இருந்து முதல்வர் விஜயை காக்க நான் கவசமாக இருப்பேன். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: