ஞாயிறு, 5 ஜூலை, 2026

கோவையில் நெகிழ்ச்சி ; ஆலாந்துறை நல்லூர்பதி பழங்குடியின மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குத் பாரம்பரிய இசை முழங்க நடனத்துடன் உற்சாக வரவேற்பு !!!

SHARE

 கோவையில் நெகிழ்ச்சி ; ஆலாந்துறை நல்லூர்பதி பழங்குடியின மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குத் பாரம்பரிய இசை முழங்க நடனத்துடன் உற்சாக வரவேற்பு !!!

 கோவை, ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராம மக்களின் குலதெய்வமான மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.

 இவ்விழாவில் பங்கேற்க வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு, மலைவாழ் மக்கள் தங்களது பாரம்பரிய இசை வாத்தியங்களை முழங்கி, சிலிர்க்க வைக்கும் நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோவை மாவட்டம், ஆலாந்துறை அடுத்த நல்லூர்பதி கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களின் முதன்மை வழிபாட்டுத் தலமாகவும், குலதெய்வமாகவும் விளங்குவது அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் ஆகும். இக்கோவில் புனரமைக்கப்பட்டு, இதன் மகா கும்பாபிஷேக விழா பல்வேறு யாகசாலை பூஜைகளுடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

 இன்று காலையில் புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பட்டு, கோபுரக் கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.  இதில் சுற்று வட்டாரத்தைச் மலைவாழ் மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

​இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சாமி தரிசனம் செய்வதற்காகத் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி நல்லூர்பதி கிராமத்திற்கு வருகை தந்தார்.

​அப்போது, நல்லூர்பதி மலைவாழ் மக்கள் தங்களது தொன்மையான கலாச்சாரத்தை முறைப்படி பிரதிபலிக்கும் வகையில், பாரம்பரிய இசை வாத்தியங்களை முழங்கினர். 

இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து, தங்களின் பாரம்பரிய நடனமான கரகாட்டம் மற்றும் பழங்குடியின நடனங்களை ஆடித்தர முன்னாள் அமைச்சரை வரவேற்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: