கரும்பு லாரியைக் கண்டதும் ‘ஜெட்’ வேகத்தில் ஓடிவந்த ஒற்றை யானை ; நடுரோட்டில் லாரியை மறித்து ருசித்த கில்லாடி - வைரல் வீடியோ !!!
தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியில் கரும்பு ஏற்றி வந்த லாரியைக் கண்டதும், சாலையின் குறுக்கே மின்னல் வேகத்தில் ஓடி வந்து லாரியை மறித்து யானை கரும்புகளைப் பிடுங்கித் தின்ற நெகிழ்ச்சியான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடி அருகே, கரும்புகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று மெதுவாக வந்து கொண்டு இருந்தது. அப்போது, அப்பகுதியில் சுற்றித் திரிந்த ஒற்றைக் காட்டு யானை ஒன்று, கரும்பு வாசனை பிடித்ததும் சாலையின் நடுவே மிகவும் வேகமாக ஓடி வந்தது.
யானையைக் கண்டதும் லாரி ஓட்டுநர் உடனடியாக லாரியை நிறுத்தி உள்ளார். சற்றும் தாமதிக்காத அந்த யானை, லாரி தனது தும்பிக்கையால் கரும்பு கட்டுகளை ஒவ்வொன்றாக இழுத்தது
லாரியை வழிமறித்து யானை கரும்பு சாப்பிட்ட காட்சி அங்கு இருந்த பயணிகளுக்கு அச்சத்தையும், அதேவேளையில் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
அங்கு இருந்த நபர் ஒருவர் இந்த காட்சியைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார்.
தற்போது இணையதளங்களில் இந்த வீடியோ, வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
அதேசமயம், அடர்ந்த வனப்பகுதியில் வாகனங்களை இயக்கும் போது ஓட்டுநர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

0 கருத்துகள்: