புதன், 28 அக்டோபர், 2026

தமிழ்நாட்டில் ஆட்டோக்களுக்கான கட்டணம் நிர்ணயம் !

SHARE

இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு வழக்கமான கட்டணத்தைப் போல் 1.5 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

மாநிலம் முழுவதும் 50 ரூபாயை குறைந்தபட்ச ஆட்டோ கட்டணமாக நிர்ணயித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில், அடிப்படை கட்டணமாக 60 ரூபாயும், கூடுதலாக மலைப்பாதையில் பயணம் செய்வதற்கு என்று அடிப்படை கட்டணமாக 30 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.

தமிழ்நாட்டில் சென்னை போன்ற பெருநகரப் பகுதிகள் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகள் மற்றும் மலைப் பாதைகளில் இயக்கப்படும் வாடகை ஆட்டோக்களுக்கான கட்டணங்களை நிர்ணயித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கான குறைந்தப்பட்ச பயணத் தூரம் 1.8 கிலோ மீட்டராக நிர்ணயிக்கப்படுகிறது. இந்த தூரத்தில் பயணம் செய்வதற்கு குறைந்தபட்ச கட்டணம் 50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி, குறைந்தபட்ச தூரத்தைத் தாண்டி பயணிக்கும் ஒவ்வொரு கூடுதல் கிலோ மீட்டருக்கும், 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். தொடர்ந்து, மலைப் பாதைகளில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு குறைந்தப்பட்ச கட்டணத்தைப் போல் 1.2 மடங்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

அதாவது, அடிப்படை கட்டணமாக 60 ரூபாயும், கூடுதலாக மலைப்பாதையில் பயணம் செய்வதற்கு என்று அடிப்படை கட்டணமாக 30 ரூபாயும் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு, வழக்கமான கட்டணத்தைப் போல் 1.5 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

ஆட்டோக்களில் பயணிகள் காத்து இருக்கும் நேரத்திற்காக ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய் காத்திருப்பு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, மோட்டார் வாகனச் சட்டம், 1988-இன் கீழ் இந்தக் கட்டணங்களை நிர்ணயிக்க மாநில போக்குவரத்து ஆணையம் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து ஆணையங்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் உத்தரவிட்டு உள்ளார்.

இதன்மூலம், 2013 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட, இதற்கு முந்தைய அறிவிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதனைத் தொடர்ந்து, தற்போது வெளியிடப்பட்டு உள்ள இந்த ஆட்டோ கட்டணம் தான் நடைமுறையில் இருக்கும். மேலும், சென்னை மற்றும் பிற மாவட்டங்களிலும், மலைப் பாதைகளிலும் உள்ள அனைத்து ஆட்டோக்களுக்கும் இந்த கட்டணம் பொருந்தும் என மாநில போக்குவரத்து ஆணையம் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: