சனி, 25 ஜூலை, 2026

கோனியம்மன் கோவில் உண்டியல் திருட்டில் பூசாரி உட்பட 4 பேர் அதிரடி கைது: செயல் அலுவலர் கொடுத்த பரபரப்புப் புகார் - ரகசிய விசாரணையில் அம்பலமான முறைகேடு !!!

SHARE

 கோனியம்மன் கோவில் உண்டியல் திருட்டில் பூசாரி உட்பட 4 பேர் அதிரடி கைது: செயல் அலுவலர் கொடுத்த பரபரப்புப் புகார் - ரகசிய விசாரணையில் அம்பலமான முறைகேடு  !!!

கோவை, மாநகரின் மிகவும் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற அருள்மிகு கோனியம்மன் திருக்கோவிலில் உண்டியல் பணம் மற்றும் கோவில் நிதியில் அரங்கேறிய முறைகேடு விவகாரத்தில், கோவில் பூசாரி உட்பட ஊழியர்கள் 4 பேரை உக்கடம் காவல் துறை போலீசார் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர்.

கோவை, மாநகரின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவிலில், கடந்த சில நாட்களாக உண்டியல் வசூல் பணம் மற்றும் பல்வேறு கட்டண ரசீது நிர்வாக நடவடிக்கைகளில் பெருமளவில் கையாடல் மற்றும் முறைகேடுகள் நடந்து வருவதாகக் கோவில் செயல் அலுவலர் (EO) குமார் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த உக்கடம் காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார், கோவில் ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், கோவிலில் டிக்கெட் விற்பனையாளராகப் பணியாற்றி வந்த பாலசுப்பிரமணியம், அலுவலக உதவியாளர் சரவணன், திருவலகு பணியாளர் பிரதீப் குமார் மற்றும் கோவில் பூசாரி கிருஷ்ணராஜ் ஆகிய 4 பேரும் இணைந்து உண்டியல் பணத்தைத் தந்திரமாகச் சுருட்டியது ஆதாரங்களுடன் அம்பலமானது. இதை அடுத்து 4 பேரையும் உக்கடம் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

இந்த நிதி முறைகேட்டில் கோவில் உயர் அதிகாரிகளுக்கோ அல்லது வெளி நபர்களுக்கோ தொடர்பு உள்ளதா, மேலும் பல லட்சம் ரூபாய் நிதி பரிவர்த்தனைகளில் கையாடல் நடந்து உள்ளதா ? என்பது குறித்தும் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

​இதனிடையே, கைது செய்யப்பட்ட பூசாரி கிருஷ்ணராஜ் உட்பட 4 பேரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திய போலீசார், பின்னர் அவர்களைப் பலத்த பாதுகாப்புடன் நீதிபதியின் இல்லத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: