கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் ; நிதி வசூல் செய்யப்பட்டது தொடர்பாக வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள 5 பேரின் இல்லங்களிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை..!
கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு நிதி வசூல் செய்யப்பட்டது தொடர்பாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரின் இல்லங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக NIA கைது செய்துள்ள பெரோஸ், நவாஸ் , அப்பாஸ் , யூசுப் ஆகியோரது வீடுகளிலும் , கேரள சிறையில் இருந்தபடி இவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கியதாக கைது செய்யப்பட்ட அசாருதீன் இல்லத்திலும் அமலாக்க துறை சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது.
அசாருதீன் ஏற்கனவே 2019ம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த குண்டுவெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாதிகளுடன் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு இருந்ததாக NIA வால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அசாருதீன் சிறையில் இருந்தபடி , கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் இந்த ஐந்து பேரின் இல்லங்களிலும் இன்று காலை 8 மணி முதல் அமலாகத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஐந்து குழுக்களாக பிரிந்த கேரளாவில் இருந்து வந்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் , இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது நிதி வசூல் செய்தது தொடர்பாக இந்த விசாரணையானது நடத்தப்பட்டு வருகிறது.

0 கருத்துகள்: