பெண் நிர்வாகி மீது பாய்ச்சல்... ஆடையைக் கிழித்து ‘த.வெ.க’வினர் வெறிச்செயல் ; கோவை சூலூரில் எம்.எல்.ஏ முன்னிலையில் அரங்கேறிய உட்கட்சி மோதல் - அரசு மருத்துவமனையில் அனுமதி !!!
நன்றி தெரிவிப்புக் கூட்டத்தில் மாலை போடச் சென்ற போது விபரீதம்; தடுத்தி நிறுத்தித் தாக்கிய த.வெ.க நிர்வாகிகள் - கோவையில் பெரும் பரபரப்பு!
கோவை, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் தலைமையில் கணியூர் பகுதியில் நன்றி தெரிவிப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் சுகுமாருக்கு மாலை அணிவிக்கச் சென்ற அக்கட்சியின் ஊராட்சி செயலாளர் வசந்தியை அக்கட்சி நிர்வாகிகளே தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவரை தாக்கி ஆடையை கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதை அடுத்து வசந்தியை அவரது ஆதரவாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிப்படை உறுப்பினராகப் பணியாற்றி தேர்தலிலும் பணியாற்றிய பெண் நிர்வாகியை அக்கட்சியினரே எம்.எல்.ஏ முன்னிலையில் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

0 கருத்துகள்: