ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

கோவையில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒடிசாவைச் சேர்ந்த நபர் கைது..

SHARE

கோவையில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒடிசாவைச் சேர்ந்த நபர் கைது...

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் K.ரெட்டி  உத்தரவின்பேரில், கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மதுக்கரை காவல் நிலைய போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் ஒடிசா மாநிலம், பாலங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த சித்தரஞ்சன் கடாத்யா (32) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதை அடுத்து குற்றவாளியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கைது செய்து, அவர்மீது மதுக்கரை காவல் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கோவை மாவட்ட காவல்துறை தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது பகுதிகளில் போதைப்பொருள் தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தால், அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது காவல்துறையின் உதவி எண்களுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து சமூக நலனுக்காக ஒத்துழைக்குமாறு கோவை மாவட்ட காவல்துறை கேட்டுக் கொண்டு உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: