வால்பாறை பகுதியில் சுமார் 1.100 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் ; சூசை கைது செய்து சிறையில் அடைப்பு - கோவை மாவட்ட காவல்துறையினர் நடவடிக்கை...
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் K. ரெட்டி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
அதன் அடிப்படையில், வால்பாறை காவல் நிலைய காவல்துறையினருக்கு கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல்துறையினர் வால்பாறை காமராஜ் நகர் அருகே சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்து இருந்த வால்பாறை பகுதியில் சேர்ந்த சாமுவேல் மகன் தாஸ்@மரிய சூசை (54) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து சுமார் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், காவல்துறையினர் மேற்படி நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்டம்-ஒழுங்கிற்கு எதிராகச் செயல்பட்டாலோ, சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து உள்ளார்.

0 கருத்துகள்: